குறும்பனை கடற்கரையில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


குறும்பனை கடற்கரையில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)

குறும்பனை கடற்கரையில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

புதுக்கடை:

குமரி மாவட்ட உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் நேற்று குறும்பனை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சிறு சிறு மூடைகள் இருப்பதை கண்டனர். அருகில் சென்று சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 1250 கிேலா ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story