போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது


போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது
x

போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

அண்ணா நகர்,

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் ராவ் (வயது 44). அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டு ரூபாய்களை மாற்றி கொடுக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள அலுவலகத்துக்கு மற்றொரு கிளை அலுவலகத்தில் இருந்து ரூ.4 லட்சத்தை பிரபாகர் ராவ் வாங்கி வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் போலீஸ் போல் நடித்து அவரிடம் இருந்த ரூ.4 லட்சத்தை பறித்து சென்றனர்.

இதுபற்றி அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (31), பாலாஜி (29) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடன் கொடுக்கும் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஆண்டு அங்கு பணிபுரியும் சக ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறை சென்றது தெரிந்தது.

சிறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தவர்கள், பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டினர். அதன்படி போலீஸ் போல் நடித்து பிரபாகர் ராவிடம் பணம் பறித்ததும், அவரிடம் பறித்த பணத்தை உல்லாசமாக இருக்க செலவு செய்ததும் தெரியவந்தது.


Next Story