சென்னையில் கஞ்சா கடத்திய 2 வட மாநில இளைஞர்கள் கைது - 21 கிலோ கஞ்சா பறிமுதல்


சென்னையில் கஞ்சா கடத்திய 2 வட மாநில இளைஞர்கள் கைது - 21 கிலோ கஞ்சா பறிமுதல்
x

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர்.

சென்னை,

சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசர், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story