ராணுவ வீரர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்


ராணுவ வீரர் மரணம்:  மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 14 Aug 2017 10:15 PM GMT (Updated: 14 Aug 2017 9:09 PM GMT)

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் மிக உன்னதமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் இளையராஜா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்துகிறேன்.

இளையராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார்.


Next Story