புதிய புயல் ஆபத்து; சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்; ஆட்சியர் அறிவுறுத்தல்


புதிய புயல் ஆபத்து; சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்; ஆட்சியர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2017 3:24 PM GMT (Updated: 3 Dec 2017 3:24 PM GMT)

புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தென் தமிழம், கேரளாவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.  கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த நிலையில், புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் சென்னை மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆட்டோவில் ஒலி பெருக்கி வழியே மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்  என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story