தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்


தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 21 March 2018 10:59 PM GMT (Updated: 21 March 2018 10:59 PM GMT)

பொது வீதிகளில் அனுமதியின்றி மத பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

 ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், மாநில செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் மீண்டும் நிச்சயம் அமலாக்கப்பட வேண்டும். மதமாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழ வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வுகளை மக்களை தேடிச்சென்று நாம் வழங்க வேண்டும். இந்து மத கண்ணியம் காக்கப்பட வேண்டும்’’, என்றார்.


Next Story