அதிமுக நடத்தும் உண்ணாவிரதம் வெற்றி பெறும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


அதிமுக நடத்தும் உண்ணாவிரதம் வெற்றி பெறும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 3 April 2018 3:25 AM GMT (Updated: 3 April 2018 3:25 AM GMT)

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டம் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். #CauveryManagementBoard #CauveryIssue

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத  அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது.  இந்த உண்ணா விரத போராட்டத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ” காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டம் வெற்றி பெறும்” என்றார். 

Next Story