தமிழக உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம்; மு.க. ஸ்டாலின்


தமிழக உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம்; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 April 2018 1:45 PM GMT (Updated: 4 April 2018 1:45 PM GMT)

தமிழக உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MKStalin

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தி.மு.க. சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  அவர்களுடன் வணிகர் சங்கங்களும் இணைய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழக உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து, மக்கள் விரோத திட்டங்களை அறவழியில் எதிர்க்க வேண்டும்.  உணர்வுகளுக்கு மதிப்பளித்து தி.மு.க. அறவழியில், அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறது.

தீக்குளித்தல், விஷம் அருந்துதல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story