டெல்லி அரசியலே போதும்: தமிழக முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி


டெல்லி அரசியலே போதும்: தமிழக முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 27 Sep 2018 10:30 PM GMT (Updated: 27 Sep 2018 7:55 PM GMT)

எனக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

சென்னை, 

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘உங்களுக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நிச்சயமாக எனக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை. டெல்லி அரசியல் எனக்கு பழக்கமான ஒன்று. எனவே பழகிய ஒரு இடத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

தி.மு.க.வில் பெண் உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக, மாவட்ட செயலாளர்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். எனவே பெண்கள் இன்னும் அதிகமாக அரசியலில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதே இன்றைய முக்கியமான தேவை ஆகும்.’ என கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.

Next Story