தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் கருத்து வேறுபாடா? டிடிவி தினகரன் விளக்கம்


தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் கருத்து வேறுபாடா? டிடிவி தினகரன் விளக்கம்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:37 AM GMT (Updated: 27 Oct 2018 4:37 AM GMT)

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சசிகலாவை படிப்படியாக சந்திப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது:- தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கும் தமக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது. 

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பலனை எதிர்பார்த்து யாரும் இல்லை. இடைத்தேர்தல் வந்தால், அதை சந்திக்க 18 பேரும் தயாராக உள்ளனர். சசிகலாவை தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்கள் படிபடியாக சந்திப்பார்கள். எனது ஆதரவாளர்கள் 3 நாட்கள் மதுரையில் தங்கி இருப்பார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story