வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது; இந்திய வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது; இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:18 PM GMT (Updated: 5 Dec 2018 4:18 PM GMT)

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது.  காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.

இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  இதனால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Next Story