நெல்லையில் போலீசாரின் அதிரடி சோதனையில் 14 ரவுடிகள் கைது; வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்


நெல்லையில் போலீசாரின் அதிரடி சோதனையில் 14 ரவுடிகள் கைது; வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:29 AM GMT (Updated: 4 Jan 2019 4:29 AM GMT)

நெல்லையில் போலீசாரின் அதிரடி சோதனையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நெல்லை,

நெல்லையில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலையை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.  இதில், தச்சநல்லூரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 14 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story