உயர் கல்வி துறை செயலாளரை உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின்


உயர் கல்வி துறை செயலாளரை உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Jan 2019 3:01 PM GMT (Updated: 7 Jan 2019 4:28 PM GMT)

உயர் கல்வி துறை செயலாளரை உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், ஊராட்சி சபை கூட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை எவ்வித காலதாமதமும் இன்றி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, உயர்நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வி துறை செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்க கூடாது.  உயர் கல்வித்துறை செயலர் பொறுப்பில் இருந்து மங்கத்ராம் சர்மா உடனடியாக விடுவிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story