நீட் தேர்வு விலக்கு மசோதா; குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்று தருவாரா பிரதமர் மோடி? ஸ்டாலின் கேள்வி


நீட் தேர்வு விலக்கு மசோதா; குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்று தருவாரா பிரதமர் மோடி? ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 6 Feb 2019 3:06 PM GMT (Updated: 6 Feb 2019 3:06 PM GMT)

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பிரதமர் மோடி பெற்று தருவாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பேசும்பொழுது, தேர்தல் நெருங்கும் போது வாக்குறுதிகளை அள்ளி விடும் பிரதமர் மோடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து ஒப்புதலை பெற்று தருவாரா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராகி கொண்டிருக்கும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைப்பாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story