சென்னை போரூரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் கொள்ளை


சென்னை போரூரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 7 Feb 2019 4:05 PM GMT (Updated: 7 Feb 2019 4:05 PM GMT)

சென்னை போரூரில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் இருந்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை போரூரில் உள்ள கனரா வங்கியில் பணம் நிரப்புவதற்காக வாகனம் ஒன்று வந்தது.  இந்த வாகனத்தில் இருந்த காவலர் மற்றும் ஓட்டுனரை தாக்கி மர்ம நபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதுபற்றி மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story