ஊராட்சி சபை கூட்டம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல் அமைச்சர் தயாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி


ஊராட்சி சபை கூட்டம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல் அமைச்சர் தயாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2019 3:40 PM GMT (Updated: 19 Feb 2019 3:40 PM GMT)

ஊராட்சி சபை கூட்டம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல் அமைச்சர் தயாரா என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர்,

வேலூரில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்பொழுது, திராவிட கட்சிகளை அழிப்பதே தனது நோக்கமென கூறிய பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க. திராவிட கட்சி இல்லை என உறுதியாகி உள்ளது என கூறினார்.

ஊராட்சி சபை கூட்டம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல் அமைச்சர் பழனிசாமி தயாராக இருக்கிறாரா என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்து, நம்முடன் சில தோழமை கட்சிகள் உள்ளனர்.  இன்னும் 2 நாட்களில் தி.மு.க. கூட்டணி அறிவிக்கப்படும்.  பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மனதார கூட்டணியில் சேரவில்லை.  அச்சத்தினாலேயே சேர்ந்துள்ளது.  யார் எந்த கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

Next Story