நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு; ஸ்டாலின் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு; ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2019 1:01 PM GMT (Updated: 25 Feb 2019 1:01 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அவர் கூட்டத்தினரிடையே பேசும்பொழுது, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.  இந்த தேர்தலோடு இடைத்தேர்தலும் வர வாய்ப்புள்ளது.  இது மட்டுமல்ல, சட்டசபை பொதுத்தேர்தலும் வருமா, வராதா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் கூறினார்.

Next Story