பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 21 Jun 2019 3:07 AM GMT (Updated: 21 Jun 2019 6:38 AM GMT)

பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை,

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  நாட்டின் பல்வேறு இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில்,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசனங்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் செய்தனர். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். மேலும், அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை இல்லை. 

மத மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகா கற்றுத்தர 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக உள்ளதால் விரைவில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும்” என்றார். 


Next Story