இலங்கைத் தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது - ஆர்.பி.உதயகுமார்


இலங்கைத் தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது - ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 29 Dec 2019 9:56 AM GMT (Updated: 29 Dec 2019 9:56 AM GMT)

இலங்கைத் தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியற்றிற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்கப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், “கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;-

“தேசிய குடியுரிமை பதிவேடு நடைமுறைப்படுத்தப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை ஸ்டாலின் அறிவாரா?

தமிழக அரசுக்கு எதிராக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதையும் செய்ய தயாராக இருக்கிறார் ஸ்டாலின்.

இலங்கைத் தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது” என்று கூறியுள்ளார்.

Next Story