மதுரையில் நேர்முக தேர்வு மூலம் கொரோனா பணிக்காக தற்காலிக மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பு
கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை,
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுவதற்கான மருத்துவர்களை தேர்வு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேர்முக தேர்வு மூலம் இதுவரை 27 தற்காலிக மருத்துவர்களை மதுரை மருத்துவ கல்லூரி டீன் நியமித்துள்ளார். இதேபோல, தேவைப்படும் செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள், மருந்தாளர்கள் என அனைத்து மருத்துவ பணியாளர்களையும் கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுக்கலாம் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story