மாநில செய்திகள்

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை - வைகோ அறிக்கை + "||" + Karnataka has no right to stop Tamil Nadu from using Cauvery surplus water - Vaiko report

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை - வைகோ அறிக்கை

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை - வைகோ அறிக்கை
காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, 

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க தென் மாவட்டங்களுக்கு மடைமாற்றுவதற்காக இத்திட்டத்தை சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் இது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பேசும்போது, “காவிரி ஆற்றின் மிகை நீரைப் பயன்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிப்போம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடகா பா.ஜ.க. அரசின் முதல்-அமைச்சர் எடியூரப்பா, “தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதை தடுத்து நிறுத்துவோம்” என்று கொக்கரித்துள்ளார்.

அதைப்போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்” என்று அவர் பங்குக்குத் தெரிவித்து இருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் உறுதி செய்வது மட்டுமே கர்நாடக அரசின் வேலையாகும். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை வடிநிலப் பகுதியான தமிழகம் தக்க வழியில் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை.

2007-ல் நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தபோது, பாசனப் பரப்பு 18.8 லட்சம் ஏக்கராக உயர்ந்துவிட்டது. அதன்பின்னர் தற்போது 13 ஆண்டுகளில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 21 லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது. இதனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் 30 லட்சம் ஏக்கராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதில் ஒரு பகுதியாக மேகதாது அணைத்திட்டத்தை உருவாக்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன? 1971-ல் காவிரிப் படுகைப் பகுதிகளில் 25.03 ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு, தற்போது 16 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு இதனைத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும்” என்று வைகோ+ கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தொடரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
4. கொரோனா தொற்று பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
5. மே 08: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.