மாநில செய்திகள்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை மையம் தகவல் + "||" + Chance of heavy rain and landslides in Nilgiris and Coimbatore districts

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு  ஏற்பட வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மன்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மற்றும் நாளை 2 நாட்களும் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 25 ஆம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
4. கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5. நேபாளத்தில் இடைவிடாது கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 77 பேர் பலி
நேபாளத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வரும் நிலையில் அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77 பேர் பலியாகினர்.