பாலாற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை உடனடியாக தடுக்க வேண்டும் சீமான் கோரிக்கை


பாலாற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை உடனடியாக தடுக்க வேண்டும் சீமான் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2021 7:06 PM GMT (Updated: 26 Aug 2021 7:06 PM GMT)

பாலாற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை உடனடியாக தடுக்க வேண்டும் சீமான் கோரிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையில் உள்ள பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் ரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

ஆனால் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை அதிக அளவில் ஆற்றிலே விடப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, பாலாற்றில் நீர் குடிக்கும் விலங்குகளும் நோய் வாய்ப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி சார்பில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலாற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளைப் முறையாக சுத்தம் செய்யாமல் ஆற்றில் கலக்கும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும், ராணிப்பேட்டை மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story