மாநில செய்திகள்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு + "||" + Madurai: Students protest to hold exams online ..!

மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை, 

ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

முன்னதாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு, ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி முழக்கமிட்டனர். இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிப்ரவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு
அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் ஆன்லைனில் ஒரே மாதிரியாக நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
2. பாலமேடு ஜல்லிக்கட்டு: 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவுபெற்று உள்ளது. 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
3. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவு: 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன..!!
பாலமேடு வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்து விட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
4. ஆரவாரத்துடன் நடைபெற்று வந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளின் இறுதி சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
5. புள்ளியியல் சார்நிலை பணியிடங்களுக்கான தேர்வு: தமிழகத்தில் 79 மையங்களில் 32,262 பேர் எழுதினர்
தமிழகத்தில் 79 மையங்களில் நடந்த புள்ளியியல் சார்நிலை பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை 32 ஆயிரத்து 262 பேர் எழுதினர் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.