பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது; போலீசார் விசாரணை...!


பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது; போலீசார் விசாரணை...!
x
தினத்தந்தி 10 March 2022 3:15 PM IST (Updated: 10 March 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூரில் பள்ளி ஆசிரியரை போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில் சிதம்பரம் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் சிதம்பரம் மாணவிகளிடம் ஆத்துமீறுவதாக புகார் எழுந்து உள்ளது.

இதனை அறிந்த வீரவநல்லூர் போலீசார் பள்ளி மற்றும் ஆசிரியர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் சிதம்பரத்தின் மீதான குற்றச் சாட்டு உறுதியானதை தொடர்து அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் வீரவநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story