தீபாவளி சீட்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி ஒருவர் கைது


தீபாவளி சீட்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி ஒருவர் கைது
x

திருநின்றவூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்தவர் கைதானார். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருநின்றவூர்,

ஆவடி அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கங்கை தெருவை சேர்ந்தவர் தேவிகா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த உமயபார்வதி அவரது கணவர் செல்வகுமார் மற்றும் முரளி (வயது 50) ஆகியோர் தாங்கள் நடத்தி வந்த தீபாவளி சீட்டில் சேரும்படி தேவிகாவிடம் ஆசை வார்த்தை கூறினர்.

இதையடுத்து தேவிகா கடந்த 2021 ஜனவரி முதல் 2022 நவம்பர் வரை ஒரு சீட்டுக்கு ரூ.2 லட்சம் என 2 சீட்டில் ரூ.4 லட்சம் பணத்தை கட்டி உள்ளார். சீட்டின் கடைசி ஏலத்திற்கு அவர்களது வீட்டிற்கு தேவிகா சென்ற போது அவர்கள் குடியிருந்த வீடு பூட்டி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேவிகா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உமயபார்வதி அவரது கணவர் செல்வகுமார் மற்றும் முரளி ஆகியோர் கூட்டாக சேர்ந்து தேவிகா உட்பட சுமார் 18 பேரிடம் ரூ.57 லட்சத்து 72 ஆயிரம் வரை சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானது தெரிய வந்தது. இதில் ஏற்கனவே செல்வகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த திருநின்றவூர் தாசர்புரம் ஐ.வி.ஒய் நகரை சேர்ந்த முரளியை போலீசார் நேற்று கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உமயபார்வதியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story