பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு..!


பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு..!
x

சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆலோசனை கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்; இல்லையெனில் நேரம் மாற்றி அறிவிக்கப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story