அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் - திருத்தணி ஆர்.டி.ஓ. நடவடிக்கை


அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் - திருத்தணி ஆர்.டி.ஓ. நடவடிக்கை
x

அனுமதி இன்றி கிராவல் மண் எடுத்து வளர்ச்சி பணிகள் செய்த அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து திருத்தணி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி மதுராநரசராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பவன். இவர் திருத்தணி ஆர்.டி.ஓ. தீபாவிடம் அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவி ஜான்சி அத்திமாஞ்சேரி கிராமத்தில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து ஊராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுவதாக புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணையில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்தது உறுதியானது. இதையடுத்து திருத்தணி ஆர்.டி.ஓ. தீபா சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி ஜான்சிக்கு ரூ.12 லட்சத்து 28 ஆயிரத்து 768 அபராதம் விதித்தார். மேலும் இந்த தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story