தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை


தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை
x

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையில் வசிப்பவர் திருவாசகம் முற்றோதல் புகழ் சிவனடியார் சிவதாமோதரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர், சிவனடியார்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில்,

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆன்மீக ஆட்சி என்பது கோவிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது ஆன்மீக ஆட்சியில் ஒரு பங்கு அவ்வளவுதான். ஆன்மீக ஆட்சி என்பது மக்களுக்கான சிந்தனை, சமுதாயத்தின் மீது ஒரு எண்ணம், ஜாதி, மதத்தையெல்லாம் தாண்டி மனிதனை, மனிதனாக பார்ப்பது.

அதைவிட மிக முக்கியமானது, இருப்பவன் தன்னிடமிருப்பதை சுவிஸ் வங்கியிலோ, வங்கி கணக்கிலோ பூட்டி வைப்பதற்கு கிடையாது. தனக்கு எவ்வளவு தேவையோ, அதைத்தாண்டி இருப்பவையை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதே ஆன்மீக ஆட்சி. அத்தகைய ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story