தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!


தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!
x
தினத்தந்தி 12 Aug 2023 8:50 AM GMT (Updated: 12 Aug 2023 12:10 PM GMT)

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் இன்று கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story