தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...!


தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...!
x
தினத்தந்தி 29 Oct 2023 1:32 AM GMT (Updated: 29 Oct 2023 4:50 AM GMT)

இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story