விலைப்பட்டியலை நிர்ணயம் செய்ய வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்-பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


விலைப்பட்டியலை நிர்ணயம் செய்ய வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்-பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x

விலைப்பட்டியலை நிர்ணயம் செய்ய வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

பெரம்பலூர்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார், பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் பதிவு நிபந்தனைகளை தளர்த்துதல், விரைந்து மறுவகைப்படுத்துதல் மற்றும் ஜி.எஸ்.டி. புதிய வரம்பிற்கு உத்தரவிடல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் பதிவு மற்றும் மறுவகைப்படுத்துதல் தொடர்பான அரசாணை அதனை சார்ந்த சுற்றறிக்கையில் கண்டுள்ள ஒப்பந்ததாரர் பதிவிற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை தளர்த்தி நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர்கள் எவரும் விடுபடாத வகையில் மாற்றியமைத்து மறு சீரமைப்பு செய்து சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். விலைப்பட்டியலை நிர்ணயம் செய்ய சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள பணிகள், நடைபெறும் பணிகள், புதிதாக தொடங்கும் பணிகள் அனைத்திற்கும் சட்ட விதிகளின் படி மத்திய அரசு தற்போது உயர்த்திய 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


Next Story