காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், சாத்தான்குளம் மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் யூனியன் காங்கிரஸ் கவுன்சிலர் குருசாமி, சாத்தான்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் லிங்கபாண்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாஸ்கர், மாநில செயலாளர் வர்த்தகப்பிரிவு பிரபு கிருபாகரன், முதலூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முத்துவேல், கொழுந்தட்டு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் அந்தோணி ராஜதுரை, அதிசயபுரம் ஜான் ஆசிரியர், முதலூர் கிராம காங்கிரஸ் மூத்த தலைவர் யோகபாண்டி, சாத்தான்குளம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவா, நகர மகிளா காங்கிரஸ் தலைவர் புளோரா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story