2 நாட்களுக்கு டிரோன்கள் இயக்க தடை


2 நாட்களுக்கு டிரோன்கள் இயக்க தடை
x
தினத்தந்தி 26 Nov 2022 6:36 PM GMT (Updated: 26 Nov 2022 6:57 PM GMT)

2 நாட்களுக்கு டிரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகிறார். பின்னர் அரியலூர் மாவட்டத்திற்கு செல்கிறார். இதையொட்டி நாளை முதல், முதல்-அமைச்சர் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் வரை பாதுகாப்பு காரணம் கருதி பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவித டிரோன்களும் (பறக்கும் கேமரா) இயக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story