கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
x

கூடலூரில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் அதிக அளவிலான ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்கள் மற்றும் பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே தமிழக பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.



Next Story