தனித்து களமிறங்குகிறாரா விஜய்? - லியோ பாடல் வரிகளால் புதிய பரபரப்பு


தனித்து களமிறங்குகிறாரா விஜய்? - லியோ பாடல் வரிகளால் புதிய பரபரப்பு
x

லியோ படத்தின் பாடல் புரமோவில் நடிகர் விஜயின் குரலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளன.

சென்னை,

சில நாட்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் அரசியல் அரங்கில் பேசுபொருளாகின.

எதிர்வரும் மக்களவையில் களமிறங்க விஜய் திட்டமிட்டுள்ளாரா எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலின் புரோமோ இன்று வெளியானது.

அந்த பாடலில் வரும் , " நான் ரெடிதான் வரவா... அண்ணண் நான் தனியா வரவா.." என்ற வரிகள் அரசியல் நெடி தூக்கலாக இருப்பதுடன், விஜயின் அரசியல் வருகை குறித்த தொடர் விவாதத்திற்கும் வழி வகுத்துள்ளது.
Next Story