சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ. 160 குறைவு...!


சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ. 160 குறைவு...!
x

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5,485க்கு விற்கப்பட்டு வருகிறது.


Next Story