திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்...!


திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்...!
x

திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக முதன்மை செயலாளராக கேஎன் நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story