கொடைக்கானலில் அதிகாரிகள் அதிரடி சோதனை - காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்
காலாவதியான உணவுப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் உணவக உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மூஞ்சிக்கல், டிப்போ சாலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்த உணவு விடுதியாளர்கள் 4 பேருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதிம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதே போல் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவக உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story