பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி
x

பரப்பாடி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவி

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள சடையநேரி கிராமத்தை சேர்ந்தவர் டென்சிங் (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி செல்வகனி (48). இவர்களுக்கு 4 மகள்கள்.

3-வது மகள் ஆக்னஸ் (16). பரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்கச் செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று வழக்கம்போல டென்சிங் தனது குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்று விட்டார். ஆக்னஸ் மட்டும் வீட்டில் இருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் ஆக்னஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டென்சிங், இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story