மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்


மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்
x

மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் அம்புராணி ஆற்றுப்பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கே.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வம்பரம்பட்டி-கல்லூர் சாலையில் சரக்கு வேனில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் போலீசாரை கண்டதும் தனது சரக்கு வேனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் அந்த சரக்கு வேனைபறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story