கல்வி உதவித்தொகை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்


கல்வி உதவித்தொகை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
x

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடக்கிறது.

திருவண்ணாமலை

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2023-ம் கல்வியாண்டிற்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை அஞ்சல் நிலையம் மூலம் அவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது.

இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மாணவர்களின் வங்கிக்கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும்.

சிறப்பு முகாம்

அஞ்சல் துறையின் மூலமாக வங்கி கணக்கு எண் தொடங்கிடவும், ஆதார் எண் இணைத்திடவும் சிறப்பு முகாம்கள் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

அதன்படி திருவண்ணாமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகி அண்ணாமலை மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

வேட்டவலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தண்டராம்பட்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, போளுர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் மாணவர்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் (ஓ.டி.பி. எண்ணுக்காக) ஆகியவற்றை சமர்ப்பித்து அஞ்சல் நிலையத்தில் புதிய வங்கி கணக்கு எண் தொடங்க மற்றும் ஆதார் எண் இணைத்திட பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story