தீபாவளி பண்டிகை: நாகர்கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்


தீபாவளி பண்டிகை: நாகர்கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்
x

தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மதுரை:

தென்னக ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் சார்பில் தீபாவளி விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் (வ.எண்.06052) நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இதைபோல் மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06051) பெங்களூரு கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 26-ந் தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9-இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.



Next Story