'தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' - மத்திய மந்திரிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்


தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்
x

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்குச் சொந்தமான 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை தலையிட்டு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்களையும், இரு படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story