கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை,

கர்நாடகத்தில் கடந்த மாதம்(ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கியது முதல் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி, ஹேமாவதி, கபிலா, துங்கா, பத்ரா, நேத்ராவதி, பல்குனி உள்பட ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. அதே சமயம் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள் வெள்ளப்பெருக்கால் கர்நாடகத்தில் உள்ள ககனசுக்கி, பரசுக்கி, சிவனசமுத்திரா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோர கிராமங்களுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story