சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை- முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்


சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை- முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்
x

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ. க்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ. க்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

அவர் கூறியதாவது ,

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இந்த அவையில் ஏற்கனவே பேசப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டசபையில் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டுள்ளது. இதை எல்லாம் தாண்டி பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் ஆகியோர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நேரடியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அப்போதில் இருந்தே நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொல்கிற கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகத்தான் இருந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நான் தடை சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க. எம்.எல்.ஏ. க்கள் வெளிநடப்பு செய்தனர்..


Next Story