அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 8.2 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது


அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:  ரிக்டரில் 8.2 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
x
தினத்தந்தி 29 July 2021 7:37 AM GMT (Updated: 29 July 2021 7:41 AM GMT)

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.



அலாஸ்கா,

அமெரிக்காவின் அலாஸ்காவில் பெர்ரிவில்லே என்ற பகுதிக்கு 91 கி.மீ. தென்கிழக்கே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 8.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, சுனாமி எச்சரிக்கையையும் விடுத்து உள்ளது.

இதனால், கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story