உலக செய்திகள்

இந்தோனேசியா: கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு - 9 பேர் பலி + "||" + Indonesia: Floods and landslides due to heavy rains killed 9 people

இந்தோனேசியா: கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு - 9 பேர் பலி

இந்தோனேசியா: கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு - 9 பேர் பலி
இந்தோனேசியாவில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்குபகுதியில் உள்ள சுகாபுமி மாவட்டத்தில் நேற்று இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை, வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

சிர்னாரேஸ்மி என்கிற கிராமத்தில் 30 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர். 34 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவவீரர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி என அச்சம்
ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
2. ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை: வீதிகளில் உலாவும் முதலைகள்; மக்கள் அச்சம்
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் குயின்ஸ்லாந்து மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
3. ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம்: மீட்பு பணிகள் தீவிரம்
ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்துள்ளது.
4. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது.