ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு


ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 8:23 PM GMT)

ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழந்தன.

மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு அருகே கலினின் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரோசடோம் அணுமின் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் உள்ளன.

இங்கு நேற்று திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் 3 உலைகள் செயலிழந்தன. இதனால் அந்த அணுமின் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. செயலிழந்த உலைகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே அணு உலைகள் செயலிழப்பால் கதிர்வீச்சு எதுவும் ஏற்பட்டு உள்ளதா? என்ற ஆய்வு நடந்தது. ஆனால் அங்கு அத்தகைய அபாயம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

கூடங்குளத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தை அமைப்பதிலும் ரஷியாவின் இந்த ரோசடோம் நிறுவனம்தான் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story