சீனாவில் தனியார் நிறுவனத்தின் வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுகள் பரிசோதனை வெற்றி


சீனாவில் தனியார் நிறுவனத்தின் வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுகள் பரிசோதனை வெற்றி
x
தினத்தந்தி 25 July 2019 8:18 AM GMT (Updated: 25 July 2019 8:31 AM GMT)

சீனாவில் தனியார் நிறுவனத்தின் வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுகள் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

ஜியுகுவான்,

சீனாவில் பெய்ஜிங் நகரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வர்த்தக ரீதியிலான இரு ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பியுள்ளது.  சீனாவின் வடமேற்கே ஜியுகுவான் செயற்கைக்கோள் அனுப்பும் மையத்தில் இருந்து இன்று மதியம் 1 மணியளவில் இவை அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த ராக்கெட் 4 நிலைகளை கொண்டது. சிறிய ரக வர்த்தக ரீதியிலான  பயன்பாட்டுக்காக உருவான இந்த ராக்கெட் 1.4 மீட்டர்கள் விட்டமும், 20.8 மீட்டர்கள் நீளமும் மற்றும் 31 டன்கள் எடையும் கொண்டது. 260 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனும் உடையது.

Next Story